சத்தியமங்கலம் உணவகத்தில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

புன்செய் புளியம்பட்டி 


 சத்தியமங்கலம் காவல்நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் 20 கடைகள் உள்ளன. வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. கரும்புகையுடன் தீப்பற்றி எரிவதைப் பார்த்து காவலர்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடை பூட்டப்பட்டிந்ததால் உள்ளே எரியும் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே கடையின் கதவை திறந்தபோது குளிர்சாதனப் பெட்டி தீப்பற்றி எரிவதை அணைத்தனர்.

கடையிலிருந்த மரப்பொருள்கள், உணவுப்பொருள்கள் என ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.