" alt="" aria-hidden="true" />
சென்னை காசிமேட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: CCTV காட்சிகள்
காசிமேடு, சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் திவாகர், 28; பிரபல ரவுடி. இவர் மீது, மூன்று கொலை முயற்சி வழக்கு உட்பட, ஏராளமான வழக்குகள் உள்ளன.
தற்போது திவாகர், விசைப்படகுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று இரவு, காசிமேடு கடற்கரையில் விசை படகுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்து விட்டு, காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நலச்சங்கம் அருகே நடந்து வந்தார்.
அப்போது, டூ - வீலரில் வந்த, எட்டு பேர் கும்பல், திவாகரை, ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டி தப்பியது.இதில் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்